keerthy suresh ragu thatha trailer released

Advertisment

கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. ஹோம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சுமன் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி யு சான்றிதழுடன் ரிலீஸாகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8a08fb3d-9aa4-4bc0-9b7c-9710122aaf8f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%281%29_0.jpg" />

இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதில் இந்தி திணிப்புக்கு எதிராக கீர்த்தி சுரேஷ் போராடுவதுபோல காட்சிபடுத்தப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான 'அருகே வா'... என்ற வீடியோ பாடல் வெளியாகியிருந்தது. அதை ஷான் ரோல்டன் எழுதி, பாடியிருந்தார். அதில் ரவீந்திர விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இடையேயான காதலை விவரிப்பது போல காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ‘ஏக் காவ் மே...’ என்ற இந்தி தலைப்பில் லிரிக் வீடியோ வெளியாகியிருந்தது. இப்பாடலை பாக்யம் சங்கர் என்பவர் எழுதியிருக்க ‘கானா’ விமலா என்பவர் பாடியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 2.26 நிமிட ஓடக்கூடிய இந்த ட்ரைலரில், முதலில் கீர்த்தி சுரேஷ் ‘பொண்ணா அடக்கமாலாம் இருக்க முடியாது’என்ற வசனத்துடன் ஆரமித்து, பிறகு பெண்கள் மீது திணிக்கம்படும் சில விஷயங்களை குறித்து ஆக்ரோஷத்துடன் பேசுவதுபோல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக ‘இந்தி நோட்ஸ் எதாவது இருந்தா குடுங்களேன்’என கீர்த்தி சுரேஷ் கெஞ்சுவது போல காட்சிபடுத்தப்பட்டு இறுதியில் அவர் இந்தியை முழுமூச்சாக படிப்பது போன்று ட்ரைலர் முடிவடைகிறது.